தொண்டைநாட்டின் காஞ்சி ஆவரண எல்லைக்குட்பட்ட நீர்வளம், நிலவளம், நாவல்மரங்கள் சூழ்ந்த புராதனமான அருள்மிகு அழகாம்பிகை ஜம்புகேஸ்வரர் ஆலயம், 27 விநாயகர் ஆலயங்கள், அகத்தியர், லோபமுத்ராதேவி, நாயன்மார்கள், முனிவர்கள், நாகர்கள், ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள், போளூர் விடோபா சுவாமிகள். சேஷாத்ரி மகான், காஞ்சி மகா சுவாமிகள், ஆத்மார்த்த மூர்த்தி மயிலை கற்பகாம்பாள் அருளாசி அனுபவத்தால் உருவான ஸ்ரீபாலா ஸ்ரீபீடம் .
சர்வ சக்திகளின் குழந்தை வடிவமாகவும், நவ கோடி சித்தர்களின் குல தெய்வமாகவும், போற்றப்படுகின்ற ஸ்ரீலலிதா மகா திரிபுர சுந்தரியில் இருந்து தனக்கு தானே தோன்றிய ஒன்பது வயது சிறுமியாக ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி, சித்தர்கள் வாலை என்றும் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படும் ஆதிசக்தி இக்கலியுகத்தில் பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு , குழந்தை தெய்வமாக மூலவர் உற்சவராக எழுந்தருளி தனிக் கோயில் கொண்டு, மேற்கையில் புத்தகம். ஜபமாலை, கீழ்கரங்களில் அபய வரத முத்திரை கொண்டு மூலவர், உற்சவராக எழுந்தருளி கல்வி, கலைஞானம், தைரியம் , செளபாக்யம் அருளி பிஞ்சு கரங்களால் தன்னை நாடி வருவோர்க்கு, நிரந்தரமான நன்மைகளை தருகின்றாள். தமிழகத்தின் முதல் குழந்தை பாலா ஸ்ரீபீடம் 1979 முதல் ஆறுமுகம் அடியார் உள்ளத்திலும், 1982முதல் இல்லத்திலும், 2008முதல் தனி ஆலயமாக அமைத்து சிறிது சிறிதாக வளர்ந்து இன்று ஸ்ரீபாலா சமஸ்தானமாக திகழ்கிறது
இந்த நூற்றாண்டின் முதல் மூலிகை திருமேனியாக ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரியை 16திதி படிகள் மேல் மாடி சந்நிதியில், 9அடி உயரத்தில் நின்ற கோலத்தில் முழுக்க முழுக்க மூலிகைகள், பாணலிங்கம், சாளக்கிராமத்தை கொண்டு நமது குருஜி வித்யா உபாசகர், ஸ்ரீ இராஜ சேகரஇளம் பூரணசிவம் அவர்களின் எட்டு ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக அதி அற்புதமாக அன்னை திருவுருவை உலகம் உய்ய செய்தருளியுள்ளார்கள். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் நம் எதிரில் நின்று பேசுபவளாய், தரிசிப்பவர்களை ஆனந்த பேரின்பத்தில் அவள் திருவருள் பெற்று செல்கின்றனர், மூலிகை அம்மனுக்கும், மூல விமானத்திற்கும் 2016ஆண்டு தை மாதம் மகா கும்பாபிஷேகம் பிரசித்தி பெற்ற குரு மகா சந்திதானங்கள் முன்னிலையில் நடைபெற்றது, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீமத் ஔஷத லலிதாம்பிகை எழுந்தருளியுள்ள ஸ்ரீசக்ரராஜ சபை திருக்கோயில்
ஸ்ரீவித்யையின் மூன்று மந்திரமே மூன்று ரூபமாக, திரிபுரசுந்தரி இத்தலத்தில் குழந்தை பாலா திரிபுரசுந்தரியாகவும், குமரி தருணீ திரிபுரசுந்தரியாகவும், தாயாக சர்வ லோக மஹா ராணியாக, பராபட்டாரிக்கா ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரியாக எழுந்தருள் பாலிக்கும் திரிசக்தி திரிபுரையாள் ஸ்ரீபீடம். மேலும் இத்தலத்தில் ஸ்ரீஉச்சிஷ்ட மகா கணபதி, ஸ்ரீமகா வீர வாராகி, ஸ்ரீஇராஜ மாதங்கி, தச மஹா சக்திகள், காமதேனு, ஸ்ரீமகா காமேஸ்வர சுவாமி எனும் ஸ்படிக லிங்கம், அசாத்ய ஸ்ரீசக்ர குண்டம், வேப்பமர மகாமேரு மற்றும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள முழுமையான ஸ்ரீவித்யா ஸ்ரீபீடம்
இக்கலியுகத்தில் பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு திருமயிலை கற்பகாம்பாளை ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபட்ட ஆறுமுக வாமதேவ சிவம் என்ற அன்பர் மனக்குறையை தீர்க்க கனவில் பல முறை குழந்தையாக காட்சியளித்ததால் 1982 ம் ஆண்டு தனது இல்லத்தில் முதலில் உற்சவ பாலாவை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் , குருநாதர் அருளாசி அனுபவத்தால், ஸ்ரீபீடம் என பெயர் சூட்டி 2009ம் ஆண்டு தனது சொந்த இடத்தில், மூல மூர்த்தியாக ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கு (தமிழகத்திலேயே முதன் முறையாக தனி ஆலயம்) தனி சந்நிதிதானம் அமைக்கப்பட்டு, சிறிது சிறிதாக வளர்ந்து ஸ்ரீமத் ஒளஷத லலிதா ஸ்ரீசக்ரராஜசபை, ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தானமாக விளங்குகிறது.
சர்வ சக்திகளின் குழந்தை வடிவமாகவும், நவ கோடி சித்தர்களின் குல தெய்வமாகவும், புற்றப்படுகின்ற ஸ்ரீலலிதா மகா திரிபுர சுந்தரியில் இருந்து தனக்கு தானே தோன்றி, அவளது பிராண சக்தியாக ஒன்பது வயது சிறுமியாக அவதரித்த கன்னிதெய்வமே, சித்தர்கள் வாலை என்றும் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படும் ஆதிசக்தி இக்கலியுகத்தில் பக்தர்களை ரட்சிக்கும் பொருட்டு , மூன்றெழுத்து பீடம் கொண்டு, குழந்தை தெய்வமாக கோயில் கொண்டு, மேற்கையில் புத்தகம். ஜபமாலை, கீழ்கரங்களில் அபய வரத முத்திரை கொண்டு மூலவர், உற்சவராக எழுந்தருளி கல்வி, கலைஞானம், தைரியம் , செளபாக்யம் அருளி பிஞ்சு கரங்களால் தன்னை நாடி வருவோர்க்கு, நிரந்தரமான நன்மைகளை தந்தருள்கிறாள் வாலை பாலா திரிபுர சுந்தரி.
ஸ்ரீவித்யையின் மூன்று மந்திர ரூபமாக, திரிபுரசுந்தரி இத்தலத்தில் குழந்தை பாலா திரிபுரசுந்தரியாகவும், குமரியாக தருணீ மகா திரிபுரசுந்தரியாகவும், தாயாக சுவாசினியாக சர்வ லோக மகா ராணீயாக, ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரியாக எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.
இந்த நூற்றாண்டின் முதல் மூலிகை திருமேனியாக ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுர சுந்தரியை 16திதி படிகள் மேல் மாடி சந்நிதியில், 9அடி உயரத்தில் நின்ற கோலத்தில் முழுக்க முழுக்க மூலிகைகள், பாணலிங்கம், சாளக்கிராமத்தை கொண்டு நமது குருஜி அவர்கள் எட்டு ஆண்டுகளாக அதி அற்புதமாக அன்னை திருவுருவை செய்தருளியுள்ளார்கள். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் நம் எதிரில் நின்று பேசுபவளாய், தரிசிப்பவர்களை ஆனந்த பேரின்பத்தில் அவள் திருவருள் பெற்று செல்கின்றனர், மூலிகை அம்மனுக்கும், மூல விமானத்திற்கும் 2016ஆண்டு தை மாதம் மகா கும்பாபிஷேகம் குரு மகா சந்திதானங்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இத்தலம் வழிபட உகந்த முக்கிய வார நாட்கள்: செவ்வாய், வெள்ளி, ஞாயிறு. வழிபட உகந்த திதி, நட்சத்திரங்கள் பூரம். மகம். பெளர்ணமிதிதி, பஞ்சமி திதி. அஷ்டமி, நவமி, வளர்பிறை சதுர்த்தசி திதி. அமாவாசை. மாத விழாக்கள் பிரதி மாத பெளர்ணமி, பஞ்சமி திதி, மாதப்பிறப்பு. வருடாந்திர முக்கிய விழாக்கள்: தை அமாவாசை முதல் ஸ்ரீஇராஜமாதங்கி நவராத்திரி உற்சவம். புரட்டாசி அமகவாசை முதல் தசரா ஸ்ரீபாலா சரத் நவராத்திரி பிரம்மோற்சவ விழா (15நாள்கள்). ஆடி அமாவாசை முதல் ஸ்ரீமகா வாராகி நவராத்திரி உற்சவம், பங்குனி அமாவாசை முதல் வசந்தகால ஸ்ரீ லலிதா மஹா நவராத்திரி பிரம்மோற்சவ பெருவிழா (15நாள்கள்) (2009 ம் ஆண்டு முதல் வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள்) மாசி மஹா சிவராத்திரி மகோற்சவம் ஐப்பசி பூரம் ஸ்ரீபாலா அவதார ஜெயந்தி உற்சவம். சித்ரா பெளர்ணமி 108 குடம் பாலாபிஷேகம் மாசி மகம் ஸ்ரீமத் ஒளஷத லலிதா அன்னப்பாவாடை நெய்குள தரிசனம் பிரதி பெளர்ணமியில் நவாவரண பூஜை, ஸ்ரீபாலா ஊஞ்சல் உற்சவம், வருடப்பிறப்பு நாள், வருஷாபிஷேகம், மற்றும் ஆடி, தை சுக்ரவாரம், இதர அம்மன் விழாக்கள் அனைத்தும்.
இத்தலத்தின் சிறப்புகள், தமிழகத்தின் முதல் பாலா தனி ஆலயம் 1982 தென்னிந்தியாவின் முதல் முதல் மூலிகை அம்மன் காமேஸ்வரர் லலிதா திருக் கல்யாணம், லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூர சம்ஹாரம் உற்சவம் நவராத்திரியில் கொடி யேறி பாலா. லலிதாவிற்கு பிரம்மோற்சவம் நடக்கும் ஓரே ஸ்ரீவித்யை தலம் உச்சிஷ்ட கணபதி தனி சந்நிதி உள்ள தலம் பராபட்டாரிக்கா ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரிக்கு கருங்கல்லால் ஸ்ரீசக்ரராஜ சபை சந்நிதி கொண்ட முழுமையான ஸ்ரீவித்யை தலம் இங்கு ஆலய ஸ்தாபகரும், மூலிகை அம்பாள் செய்தருளிய அருட்குருநாதர் ஸ்ரீ (இராஜ சேகர இளம்பூரண சிவம்) ஸ்ரீசாரியானந்தர் குருபரம்பரையில் வந்த அங்க லிங்கம் தரித்து, நித்ய இருகால சிவ அனுஷ்டானம்,பாலா மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திரிபுர சுந்தர்யை தொட்டு வழிபாடு செய்வர்.
இத்தல வழிபாட்டு விதிமுறைகள்: கை, கால்களை சுத்தம் செய்து ஆலயத்திற்குள் வரவும், ஆலயத்தினுள் செல்போன் அனுமதி இல்லை, மாடி சந்நிதி மூலிகை அம்பாளை தரிசிக்க ஆண்கள் ( சிறிய ஆண் குழந்தையாயினும்) சர்ட், பனியன் அணிந்து செல்ல அனுமதி இல்லை, திதி படியில் ஏறும் போது பொறுமையாக ஏறி தரிசித்த பிறகு எதிர்படி வழியே Reverse ல் அம்பாளை பார்த்த படி இறங்க வேண்டும், இயலாத முதியவர்கள் மட்டும் நேராக இறங்கலாம். ஆலயத்திற்குள் எங்கும் நமஸ்காரம் செய்யக்கூடாது, சத்தமாக பேசுவதை தவிர்க்கவும், கொடி மரத்திற்கு அருகில் மட்டும் நமஸ்காரம் செய்யவேண்டும். இறை நம்பிக்கை உடைய அனைத்து மதத்தினரும் ஆலய விதிமுறைக்குட்பட்டுவழிபட அனுமதி உண்டு. அம்பாள் குழந்தை என்பதால் சிறிய அளவில் புஷ்பம், அல்லது இனிப்பு நிவேதனம் செய்வது சிறப்பு.
பக்தர்கள் விருப்பத்திற்கேற்ப முன் பதிவு செய்து அபிஷேகம், மூலமந்திர ஷோமம், சகஸ்ரநாமம்/ திரிசதி அர்ச்சனை, மற்றும் அன்னதானம் செய்து ஸ்ரீபாலா, ஸ்ரீமத் லலிதா அருள் பெறலாம்.
Morning 8.00 AM to 12.45
Evening 4.30 to 8.00 .
ஸ்தாபகர் : அழகாம்பிகை அடிமை ஆறுமுக வாமதேவ சிவம். வித்யா பாஸ்கரர் சிவஸ்ரீ சுவாமிஜி இராஜ சேகர இளம்பூரண சிவம் & ஸ்ரீபீடம் குடும்பத்தினர்கள்.
ஆலய நிர்வாகம்: ஸ்ரீசக்ரராஜ பூர்ண மகா மேரு அறக்கட்டளை (பதிவு) நிர்வாகிகள்& காரிய தரிசிகள்.
27 /10 / 2024 Sunday 5 PM to 8.30 PM
Near Jambugeswarar Temple,
Chengalpattu to Thirupporur(OMR) Road,
SEMBAKKAM Village & post. Chengalpattu Dist.
Tamil nadu. Pincode : 603108.
CONTACT: